மதுரை, திண்டுக்கல் பகுதியில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனங்களான கிலாட்வே மற்றும் அன்னை பாரத் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுமான நிறுவனத்தில் சோதனை
மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த பால்ச்சாமி என்பவருடைய மகன்களான அழகர், முருகன்,ஜெயக்குமார், சரவணகுமார்,செந்தில்குமார் ஆகியோருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களான கிளாட்வே , ஜெயபாரத் மற்றும் அன்னைபாரத் மற்றும் கிளாட்வே கிரீன் சிட்டி ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். வருமான வரி சரியான முறையில் செலுத்தாத தொடர்பாகவும், கணக்கில் காட்டாமல் அதிகமான சொத்து சேர்த்து இருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான உரிமையாளர்கள் மற்றும் அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமானவரிச் சோதனையையொட்டி அந்த பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கு...? நீதிமன்றத்தில் இன்று உத்தரவு.. காத்திருக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்..!
20 இடங்களில் 50 அதிகாரிகள் சோதனை
வருமானவரித்துறையினர் கடந்த வாரம் அதிமுகவின் முக்கிய பிரமுகரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் நண்பருமான சந்திரசேகர் இல்லத்தில் சுமார் 6 நாட்கள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். இந்தநிலையில் பிரபல தனியார் கட்டுமான நிறுவனமான கிளாட்வே கிரீன் சிட்டிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த நிறுவன உரிமையாளர்களுக்கும், அதிமுக பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனையின் முடிவில் தான் வருமான வரித்துறை கைப்பற்றிய விவரங்கள் தெரியவரும்.
இதையும் படியுங்கள்
விவசாய பகுதிக்குள் நுழைந்த கரடி...! கரடியோடு சண்டையிட்டு படுகாயங்களோடு உயிர் பிழைத்த பெண்கள்