
ஊருக்குள் புகுந்த கரடி
வனப்பகுதியை ஒட்டியுள்ளவர்களுக்கும் வன விலங்குகளுக்குமான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தவகையில், யானை, புலி, சிறுத்தையிடம் சிக்கி வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் மட்டுமின்றி மனிதர்களும் உயிரிழக்கும் நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் கூட கோவையில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானைக்கூட்டம் வனக்காலவரை தாக்கிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், தேனிமாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மேற்குத்தொடர்ச்சி மலைக்கிராமம் மஞ்சனூத்து . தமிழக கேரளா எல்லையில் உள்ள இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் கொட்டைமுந்திரி,இலவமரம் உள்ளிட்ட வற்றை விவசாயம் செய்து வருகின்றனர் . இக்கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது இலவம் மரத்தோப்பில் அதே கிராமத்தைச் சேர்ந்த லீதியாள் மற்றும் லட்சுமி ஆகிய இரு பெண்கள் காவல் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
இரண்டு பெண்களை கரடி தாக்கியது
அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென மலைப்பகுதியில் இருந்துவந்த கரடி இரண்டு பெண்களையும் தாக்கி கடித்து குதறியுள்ளது. இந்த இரண்டு பெண்களுக்கும் கரடியிடம் இருந்து தப்பிக்க எவ்வளோ முயற்ச்சி செய்துள்ளனர். இருந்து போதும் கரடி தொடர்ந்து தாக்கி கடித்ததில் பெண்கள் இருவரும் கை முகம் மற்றும் கால் பகுதியில் கடிபட்டு படுகாயம் அடைந்தனர் . இதையடுத்து பெண்கள் இருவரும் அலறி சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து கரடி மீது கல்லையும், கட்டையையும் கொண்டு தாக்கி விரட்டிவிட்டு இரண்டு பெண்களையும் மீட்டுள்ளனர். இதனையடுத்து இரண்டு பெண்களையும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் அங்கு அவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தோட்டத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களை கரடி கடித்துக்குதறிய சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது
இதையும் படியுங்கள்