
விழுப்புரம்
உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப் பெற தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் சூளுரைத்தனர்..
விழுப்புரம் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தசரதன் தலைமை வகித்தார். மாநிலப் பொறுப்பாளர்கள் ஜெயபால், பாண்டியன், ஜெயமூர்த்தி, முத்து, சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ஹரிபாபு வரவேற்றார்.
மாநில மேலிடப் பார்வையாளர் வெங்கடேசன் பங்கேற்று கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில், “அடுத்த மாதம் மாவட்டம் முழுவதும் கிளைகள்தோறும் கட்சி கொடியேற்றுவது,
வருகிற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற தீவிர களப்பணியாற்றுவது” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் நத்தர்மொய்தீன், மாவட்டப் பொருளாளர் சதீஷ்பாபு, மாவட்டச் செயலாளர்கள் பார்த்திபன், இசைமாறன், மாவட்ட நிர்வாகிகள் ஜெயதேவன், பாண்டியன், சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் இறுதியில் ராஜேந்திரன் நன்றித் தெரிவித்தார்.