தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்.! அதிக மற்றும் குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதி எது.? - தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 6.11 கோடி பேர் வாக்காளர்களாக இடம்பெற்றுள்ளனர். அதிக வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக சோழிங்கநல்லூரும், குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதியாக கீழ்வேளுர் தொகுதியும் உள்ளது. 


வாக்காளர் வரைவு பட்டியல்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் சரிபார்க்கும் பணியை அரசியல் கட்சிகள் தொடகியுள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2024-ன் வரைவு வாக்காளர் பட்டியலின் படி தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியை 11 லட்சத்தை 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3லட்சத்து 68ஆயிரத்து 610 பேரும், பெண்கள்: 3கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 571 பேரும், மூன்றாம் பாலினத்தவர், 8,016 இடம்பெற்றுள்ளனர்.  கடந்தாடை ஒப்பிடும்போது 9 லட்சம் வாக்காளர்கள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Latest Videos

அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி.?

இந்தநிலையில் தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 6,52,065 வாக்காளர்களுடன், செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இதில் ஆண்கள்: 3,26,676, பெண்கள்: 3,25,279, மூன்றாம் பாலினத்தவர்: 110 பேரும் இடம்பெற்றுள்ளனர்.  மாநிலத்திலேயே குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 1,69,030 வாக்காளர்களுடன் நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழ்வேளுர் தொகுதி உள்ளது. இதில் ஆண்கள்: 83,436, பெண்கள்: 85,591, மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். 

சிறப்பு முகாம் அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க திருத்தம் செய்ய வருகிற 04:11.2023, 05:112023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பொதுவாக, வாக்குச் சாவடிகள்) சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தலைமைத் தேர்தல் அதிகாரி - செய்தி வெளியீடு | |
(1/2) pic.twitter.com/mAqASO2hXh

— TN DIPR (@TNDIPRNEWS)

 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/ நீக்கல்/ திருத்தல்/ இடமாற்றம்/ ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அந்தந்த நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.  மேலும் இன்று முதல்  டிசம்பர் 9 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கொட்டி தீர்க்க காத்திருக்கும் மழை.! எந்த மாவட்டங்கள் தெரியுமா.? வானிலை மையம்

click me!