கர்நாடகாவிற்கு செல்லும் மின்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் - விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம்

Published : Oct 27, 2023, 11:13 AM IST
கர்நாடகாவிற்கு செல்லும் மின்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் - விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம்

சுருக்கம்

கூடங்குளம், நெய்வேலி மின் நிலையத்தில் இருந்து கர்நாடகவிற்கு வழங்கும் மின்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவேரி நீர் தமிழக டெல்டா பகுதிகளின் விவசாய ஆதாரமாக விளங்குகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமலும், காவேரி மேலாண்மை வாரியம்,  காவேரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றின் உத்தரவுகளை அவமதித்தும் காவிரியில் தண்ணீர் திறந்து விட  கர்நாடகா அரசு மறுத்து வருகிறது. 

கர்நாடகா அரசின் இப்போக்கினைக் கண்டித்தும், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டியும், மத்திய அரசு காவேரி பிரச்சினையில் தலையிட்டு தமிழகத்திற்கு உரிய தண்ணிரை பெற்றுத்தர வேண்டியும் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையில் மனித சங்கிலி போராட்டம் முக்கொம்பு மேலணை பகுதியில் நடைபெற்று வருகிறது.

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு; திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

இதில் காவிரியில் உரிய  தண்ணீரை  கர்நாடக   திறந்துவிட வேண்டும்  இல்லையென்றால் தமிழகத்தில் உள்ள கூடங்குளம், நெய்வேலி மின் நிலையங்களில் இருந்து கர்நாடகவிர்க்கு வழங்கும் மின்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும். காவேரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது. கிடப்பில் போடப்பட்டுள்ள காவேரி, கோதாவரி இணைப்பு  திட்டம்,  காவேரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

விவசாய கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்‌ என கூறி விவசாயிகள்,  பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திருச்சி முக்கொம்பு மேலணை பகுதியில்  மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருச்சியில் முதல்வர் இருக்கும் போதே பயங்கரம்! காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொ*லை! அலறி ஓடிய பொதுமக்கள்
அடி தூள்.. இனி திருச்சியில் இருந்து நியூயார்க் பறக்கலாம்.. புதிய அறிவிப்பு