
டெல்லியில் 15 நாள்களாக போராடு வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று நிறைவேற்றியே ஆகனும் என தஞ்சை மாவட்ட மில் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்ட மில் உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.
இதற்கு சங்கத் தலைவர் டி.இளவரசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மூர்த்தி, எஸ். முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில், “கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 15 நாள்களாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
நெடுவாசலில் ஐட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை ரத்து செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.
நீர் நிலைகளைப் பாதுகாக்க, குளம் மற்றும் பாசன வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
தஞ்சை மாவட்ட மில் உரிமையாளர்கள் அனைவரின் ஒப்புதலுடன் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அரவை கூலி உள்ளிட்டவற்றுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்வது” என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் துணைச் செயலாளர் முருகபாண்டியன் வரவேற்றார். செயலாளர் ஆர்.கே.ரவீந்திரன் நன்றித் தெரிவித்தார்.