தேர்வர்களே அலர்ட் !! டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது..? வெளியான அறிவிப்பு..

By Thanalakshmi V  |  First Published Sep 24, 2022, 11:05 AM IST

தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 


தமிழகத்தில் கடந்த மே மாதம் 21 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ தேர்வு நடைபெற்றது. தமிழக அரசின் அமைச்சங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,413 பதவிகளுக்கு இந்த தேர்வு நடைபெற்றது.

இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளில் தேர்வு முறை நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், ஒரு பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி.. இந்த நிபந்தனைகளில் ஒன்றை மீறினாலும் போலீஸ் ஆக்சன் எடுக்கலாம்

இந்நிலையில் குரூப் 2/2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் குரூப் 2/2ஏ மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும், அக்டோபர் மாத இறுதிக்குள் குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், பொறியியல் சேவை பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:மின்வாரிய ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு..!

click me!