தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி.. இந்த நிபந்தனைகளில் ஒன்றை மீறினாலும் போலீஸ் ஆக்சன் எடுக்கலாம்

By vinoth kumar  |  First Published Sep 24, 2022, 7:27 AM IST

தமிழகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.


ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்த நிலையில் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. 

தமிழகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த செப்டம்பர் 28ம் தேதிக்குள் சமந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளார். அணிவகுப்பு நடத்துவதற்கான நிபந்தனைகளும் வெளியாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

நிபந்தனைகள் விவரம்

undefined

* அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கும் எவரும் சாதி, மதம் பற்றி தவறாக பேசக் கூடாது

*  அனுமதிக்கப்பட்ட பாதையில் இடதுபுறமாக மட்டுமே அணிவகுப்பை நடத்த வேண்டும். வழியில் நிறுத்தவோ அல்லது போக்குவரத்தின் இடையூறு ஏற்படுத்தவோ கூடாது.

*  பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்.

*  காயத்தை ஏற்படுத்தக்கூடிய கம்பு, லத்தி அல்லது ஆயுதம் எதையும் கொண்டு செல்லக்கூடாது.

*  எக்காரணம் கொண்டும் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு தொடர்பாக எதையும் பேசவோ அல்லதுது கருத்தை வெளிப்படுத்தவோ கூடாது. 

*  நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை குலைக்கும் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது.

*  காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வழிகாட்டுதலின்படி குடிநீர், முதலுதவி, ஆம்புலன்ஸ், நடமாடும் கழிப்பறை, கண்காணிப்பு கேமராக்கள், தீயணைக்கும் கருவிகள் போன்றவற்றுக்கு தேவையான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்ய வேண்டும்.

*  போக்குவரத்து மற்றும் அணிவகுப்பை ஒழுங்குபடுத்துவதற்கு காவல்துறைக்கு உதவ போதுமான தன்னார்வலர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வைத்திருக்க வேண்டும்.

*  காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே அணிவகுப்பு செல்வதை உறுதிசெய்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பாகும்.

*  பெட்டி வகையிலான ஒலிபெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது. 

*  பொது அல்லதுது தனியார் சொத்துகளுக்கு ஏற்படும் சேதத்திற்கான செலவை திருப்பி செலுத்த வேண்டும். 

*  நாட்டின் இறையாண்மை ஒருமைப்பாட்டை குலைக்கும் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. 

*  நீதிமன்றத்தின் இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால் காவல்துறையினர் சுதந்திரமாக தேவையான நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

click me!