தமிழகத்தை அதிர செய்த சுவாதி கொலை வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

By vinoth kumar  |  First Published Sep 23, 2022, 6:55 AM IST

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான சுவாதி கடந்த 2016ம் ஆண்டு, ஜூன் மாதம் 24-ம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் பெற்றோர் ரூ.3 கோடி இழப்பீடு கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான சுவாதி கடந்த 2016ம் ஆண்டு, ஜூன் மாதம் 24-ம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பீரோவை இறக்கியபோது பயங்கரம்.. மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் 3 பேர் உடல் கருகி துடிதுடித்து பலி..!

undefined

சுவாதி கொலையில் ஆரம்பம் முதலே பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும் யாரோ ஒருவரை காப்பாற்றுவதற்காக ராம்குமார் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி சிறையில் மின்சார வயரைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுவாதி இறப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி சுவாதியின் தாய் ரங்கநாயகி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையின் அலட்சியம் காரணமாகவே சுவாதி கொலை செய்யப்பட்டார் என்பதால் ரயில்வே நிர்வாகம் தரப்பில் இழப்பீடாக 3 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என  கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்வே துறை தரப்பில்,  பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்கி வருகிறது என்றும், சுவாதி கொலை என்பது  திட்டமிட்ட சம்பவம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து,  இழப்பீடு கோரி உரிமையியல் நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் சுவாதி பெற்றோரின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

இதையும் படிங்க;-  திருமணமான 11 நாளில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை.. என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்.!

click me!