போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக்கின் சென்னை மயிலாப்பூர் அருளானந்தம் தெருவில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள ஜேஎம்எஸ் ரெசிடென்சி என்ற ஹோட்டலில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது முக்கிய ஆவணங்களும் சொத்து விவரங்கள் அடங்கிய கோப்புகள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளரும் திரைப்பட தயாரிப்பளருமான ஜாபர் சாதிக் முக்கிய நபராக செயல்பட்டு வந்தார். இதனையடுத்து அவர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் என்சிபி அதிகாரிகள் கடந்த மாதம் 9ம் தேதி ஜெப்பூரில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஜூன் 4ம் தேதிக்கு பிறகு டிடிவி.தினகரன் கையில் அதிமுக.. ஒரே போடாக போட்டு இபிஎஸ்ஐ அலறவிடும் அண்ணாமலை!
இதைத்தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக்கின் சென்னை மயிலாப்பூர் அருளானந்தம் தெருவில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள ஜேஎம்எஸ் ரெசிடென்சி என்ற ஹோட்டலில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதேபோல், சென்னை தியாகராய நகரில் உள்ள இயக்குநர் அமீரின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: ஒரு கவுன்சிலரா கூட ஆக முடியல! நீ வந்து அதிமுகவை ஒழிப்பியா? அண்ணாமலையை லெப்ட் ரைட் வாங்கிய இபிஎஸ்!
இந்நிலையில், ஜாபர் சாதிக் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இதனை அமலாக்கத்துறை உறுதி செய்துள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட எக்ஸ் தளத்தில்: கடந்த ஏப்ரல் 9ம் தேதி சென்னை, மதுரை மற்றும் திருச்சியில் பல்வேறு இடங்களில் ஜாபர் சாதிக் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பல்வேறு குற்ற ஆவணங்கள் மற்றும் சொத்து விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.