கோ பேக் மோடி கிடையாது கெட் அவுட் மோடி தான்.. 10 வருடத்தில் ஒரு புல்லை புடுங்கி போட்டு உள்ளாரா? உதயநிதி கேள்வி

By Ajmal Khan  |  First Published Apr 14, 2024, 7:29 AM IST

மோடியை சென்ற முறை ஓட ஓட அடித்து விரட்டினீர்கள் அந்த கோபம் இருக்கும். எனவே இந்த முறை திரும்பி பார்க்காத அளவிற்கு ஓட விட வேண்டும் என உதயநிதி தெரிவித்துள்ளார். 


கலைஞரின் பேரனுக்கு ஓட்டு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர்,  இந்த தொகுதியில் கால் வைக்காத வீடு கிடையாது என்ற அளவிற்கு இந்த தொகுதியில் அனைத்து இடத்திற்கும் வந்து உள்ளேன். நம்முடைய மாநில உரிமைகளை மீட்க வேண்டும் என்றால் 40 அதற்கு 40 தொகுதி ஜெயிக்க வேண்டும். கலைஞர் பேரன் தயாநிதிமாறனுக்கு கலைஞர் பேரன் உதயநிதி ஸ்டாலின் ஓட்டு கேட்டு வந்துள்ளேன். இங்கே இருப்பவர்கள் கலைஞரின் பேரன்கள்  கொள்கை பேரர்கள் லட்சிய பேரர்கள்.

Latest Videos

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பட்டா பெறுவதில் சிக்கல் இருக்கின்றது, எனவே  முதலமைச்சரும் அமைச்சர்களும் சேர்ந்து ஒரு குழு ஒன்று அமைத்திருக்கிறார்கள், இந்த குழு 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி கலந்தாலோசித்து தேர்தல் முடிந்த உடன் முறையான வகையில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்று ,மழை வெள்ளம் பதிப்பு காலகட்டத்தில் தமிழக முதலமைச்சர் 6 ஆயிரம் ரூபாய் கொடுத்தார், ஆனால் தமிழகத்திற்கு மோடி ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை.மோடி புதிதாக ஒரு வடை சுட்டு உள்ளார், சுடும் வடையை அவரே சாப்பிட்டு விடுவார்  அது தான் மோடி.

Kanimozhi: 29 பைசாவை மூட்டை கட்டும் வரை நாங்கள் தூங்கமாட்டோம்; அத்தை கனிமொழிக்கு ஆதரவாக உதயநிதி பிரசாரம்

மோடி என்ன செய்தார்.?

தற்போது மகளிர் இலவச பேருந்துக்கு நீங்கள் தான் ஓனர்கள், தற்போது அனைத்து இடங்களிலும் பிங்க் பேருந்து தான் ஓடுகிறது. தற்போது பேருந்துகளை யாரும் பிங்க் பேருந்து என்று கூறவில்லை ஸ்டாலின் பேருந்து என்றுதான் கூறுகிறார்கள். இதில் குறிப்பாக சென்னை ரெக்கார்ட் பிரேக் செய்துள்ளது 66 கோடி ரூபாய்க்கு இலவச பேருந்துகள் பயணம் செய்து உள்ளார்கள் இதை கிண்டலுக்காக சொல்லவில்லை இது தான் அந்த திட்டத்திற்கான வெற்றி என கூறினார்..கல்வி ஊக்கத்தொகை 1000 ரூபாயும் வழங்கி வருகிறார்கள், குறிப்பாக சென்னையில் மட்டும் 16000 பெண்கள் பயன் பெறுகிறார்கள். மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டத்தில் தற்போது வரை ஒரு கோடியே18 லட்சம் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்.

எனவே தேர்தல் முடிந்து 5 முதல் 6 மாதங்களில் அனைத்து மகளிர்க்கும் ஆயிரம் ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறினார்.  தொடர்ந்து பேசிய உதயநிதி 10 வருடமாக இந்தியாவை ஆண்டுள்ள பிரதமர் தமிழ்நாட்டுக்கு ஒரு புல்லை புடுங்கி போட்டு உள்ளாரா? என கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு மூலம் 22 குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றார்கள். எனவே சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிக்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன். கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியது போல கண்டிப்பாக தமிழகத்திற்கு நீட் தேர்வு ரத்து செய்ய படும் என தெரிவித்தார். 

கோ பேக் மோடி இல்லை.. கெட் அவுட் மோடி

பாஜக ஆளும் 6 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை தற்பொழுது கட்டப்பட்டுள்ளது ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இதுவரை ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. தமிழகத்திலிருந்து ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரி  அனைவரும் கட்டிக் கொண்டிருக்கிறோம் அதில் பிரித்துக் கொடுப்பதுதான் ஒன்றிய அரசுடைய வேலை ஆனால் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்திற்கு வரும் 29 பைசா தான் தருகின்றார். யார் வீட்டு அப்பன் பணத்தை எடுத்து கொடுக்கிறார் மோடி.

தமிழகம் எந்த முன்னேற்றமும் அடையக்கூடாது என்பதற்காக மோடி அவர்கள் பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்.மோடியை சென்ற முறை ஓட ஓட அடித்து விரட்டினீர்கள் அந்த கோபம் இருக்கும் எனவே இந்த முறை திரும்பி பார்க்காத அளவிற்கு ஓட விட வேண்டும், நீங்கள் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கப் போகும் வேட்டு,இந்த முறை கோ பேக் மோடி கிடையாது கெட் அவுட் மோடி தான் என உதயநிதி தெரிவித்தார். 

click me!