பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.
நீலகிரி மற்றும் திருப்பூர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் பாகுபலி படம் போல் பிரம்மாண்டமாக இருந்தது.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு. ராகுல்காந்தியின் ஒரு நாள் வருகையில் பிரதமரின் ஒட்டுமொத்த பரப்புரையும் காலியாகி விட்டது. நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் ‘பாகுபலி' படம் போல பிரமாண்டமாக இருந்தது. ஒரே ஒரு கூட்டம் டோட்டல் பாஜகவும் க்ளோஸ்.
Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..
ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகையே பிரதமர் மோடியின் மொத்த பிரசார பயணத்தையும் காலி செய்துவிட்டது. ஜிஎஸ்டி பத்தி கேள்வி கேட்ட பெண்ணை தாக்கி அராஜகம் செய்கிறார்கள். பாஜகவினர் திருப்பூரை மணிப்பூராக மாற்ற முயற்சி செய்கிறார்கள். டிவி சீரியல் போல் நாடகம் ஆடுகிறது பாஜக. சீரியலில் நடப்பது போல, அதிமுகவில் ஏற்படும் திடீர் ட்விஸ்டுகளுக்கு பாஜக தான் காரணம்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை பாஜக பின்னால் இருந்து இயக்குகிறது. ஓபிஎஸ், டிடிவி போட்டியிடுவது, இபிஎஸ் தனித்து நிற்பது எல்லாமே பாஜகவின் பிளான் தான். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவை பிரதமர் மோடியின் இரட்டை தாக்குதல் ஆகும். எளிமையாக தொழில் தொடங்குவதில் தமிழகம் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது” என்று கூறினார்.