
ஈரோட்டில் ரூ. 500 கட்டினால் ரூ. 50 ஆயிரம் கடன் பெற்று தருவதாக கூறி ரூ. 5 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏட் வின் உமன்ஸ் வெல் பேர் சொசைட்டி சோசியல் ட்ரஸ்ட் என்ற தனியார் நிறுவனம் சென்னை வில்லிவாக்கத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் தலைவராக உள்ள சாந்தகுமாரி, ஈரோடு, சேலம், கரூர், கோவை, விழுப்புரம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகம் முழுவதும், உள்ள மகளிர் சுய உதவி குழுவினரை அனுகி தங்கள் நிறுவனத்தில் ஆட்களை சேர்த்துள்ளார்.
மேலும் தங்கள் நிறுவனத்தில் இணைந்தால் 500 ரூபாய் கட்டினால் ரூ. 50 ஆயிரம் கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார்.
மேலும் வங்கிகளுக்கு காப்பீட்டு தொகை, பாஸ்புக் தொகை என கூறி தலா 10 முதல் 20 ஆயிரம் வரை பணம் வசூல் செய்து ரூ. 5 கோடி வரை மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
பணம் வசூலித்து பல மாதங்கள் ஆகியும் கடனை பெற்று தராததால் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் சென்று சாந்தகுமாரியிடம் கேட்டுள்ளனர். இதற்கு அவர் முன்னுக்கு பின் முரனாக பதிலளித்ததாக தெரிகிறது. மேலும் ஆட்களை வைத்து மிரட்டிவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பணத்தை திரும்ப பெற்றுதர கோரியும் சாந்தகுமாரி மீது நடவடிக்கை கோரிக்கையும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.