
தி.மு.க தலைமை அனுமதி அளித்தால் நிச்சயம் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் என கே.சி.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது,அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சை உள்ளிட்ட தொகுதிகளில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் அடுத்த மாதம் 19-ந் தேதி அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த தொகுதியில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் தொடர்பாக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த மே மாதம் தேர்தல் நடந்த போது தி.மு.க சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த கே.சி. பழனிச் சாமி கூறியதாவது,
அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தி.மு.க சார்பில் நான் மீண்டும் போட்டியிட விரும்புகிறேன். ஆனால் தி.மு.க மேலிடம்தான் இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், தி.மு.க தலைமை அனுமதி அளித்தால் நான் நிச்சயம் போட்டியிடுவேன் என கே.சி.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.