"பெண்களை ஆண் காவலர்கள் இழுத்து சென்றதால் வாக்குவாதம்": கோவை ரயில் மறியலில் தள்ளுமுள்ளு

 
Published : Oct 19, 2016, 06:04 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
"பெண்களை ஆண் காவலர்கள் இழுத்து சென்றதால் வாக்குவாதம்": கோவை ரயில் மறியலில் தள்ளுமுள்ளு

சுருக்கம்

கோவை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை, ஆண் காவலர்களே இழுத்துச் சென்றதால் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மத்திய அரசு மறுப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் சங்கங்கள் ரயில் மறியல் போராட்டம் நேற்று முதல் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டம், காரணமாக பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மதிமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி, தமாகா, தேமுதிக உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் பலர் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

போராட்டக்காரர்கள், கோவை ரயில் நிலையத்தக்குள் செல்ல முற்பட்டபோது, காவல் துறையினர் ரயில் நிலைய வாசலிலேயே தடுப்பு சுவர்களை அமைத்து தடுத்துள்ளனர். இதில், ஆவேசம் அடைந்த போராட்டக்காரர்கள் தடுப்பை பிரித்துக் கொண்டு ரயில் நிலையத்துக்கு செல்ல முயன்றனர். இதனால், காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இதுவே தள்ளுமுள்ளாக மாறியது. 

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை, ஆண் காவலர்களே தரதரவென இழுத்து வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இதனால், போலீஸ்காரர்களுக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே வாக்குவாதம் நீடித்தது.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!