பத்து வருஷத்துக்கு முன்னாடி இங்க வந்தேன்; இனி அடிக்கடி வருவேன்…

Asianet News Tamil  
Published : Oct 28, 2016, 01:50 AM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
பத்து வருஷத்துக்கு முன்னாடி இங்க வந்தேன்; இனி அடிக்கடி வருவேன்…

சுருக்கம்

நெல்லை,

நெல்லை ராம் முத்துராம் தியேட்டருக்கு பத்து வருடங்களுக்கு முன்னாடி வந்தேன். இனி அடிக்கடி வருவேன் என்று நடிகர் தனுஷ் தெரிவித்தார்.

கொடி திரைப்படம் திபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது. இந்த படத்தின் ‘டிரைலர்’ முக்கிய ஊர்களில் புதன்கிழமை திரையிடப்பட்டது.

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில், துரை செந்தில் இயக்கத்தில், முதன்முறையாக நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் கொடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை திரிஷா, மலையாள நடிகை அனுபமா ஆகியோரும், மற்றும் பலரும் நடித்துள்ளனர். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நெல்லை ராம் முத்துராம் தியேட்டரில் கொடி படத்தின் ‘டிரைலர்’ அறிமுக விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார்.

தியேட்டருக்கு வந்த நடிகர் தனுஷை, தியேட்டர் உரிமையாளர்கள் ஆர்.கே.ராமசாமி ராஜா, ஆர்.கே.முத்துராமன், மேலாளர்கள் கிருஷ்ணன், முத்துராஜ், வினியோகஸ்தர் சுப்புராஜ் ஆகியோர் ஆகியோர் வரவேற்று சால்வை அணிவித்தனர்.

நடிகர் தனுஷ்சுக்கு செண்டை மேளம் முழங்க தியேட்டர் வளாகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தனுசைப் பார்த்ததும் இரசிகர்கள் சிறகடித்தனர். அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்தனர். இரசிகர்கள் பலர், நடிகர் தனுஷ்சுடன் ‘தாமி’ (செல்பி) எடுத்து கொண்டனர். அப்போது தனுஷ் நடித்த பல்வேறு படங்களில் இருந்து முக்கிய காட்சிகளும், பாடல்களும் ஒலிபரப்பட்டன.

“எல்லோருக்கும் வணக்கம். உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் காட்டும் அன்பையும், பாசத்தையும் மறக்க முடியவில்லை. அதனால்தான் உங்களை தேடி வந்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே தியேட்டரில் ‘புதுப்பேட்டை’ படம் திரையிட்டபோது வந்தேன். தற்போது வந்து இருக்கிறேன்.

இனி இந்த அளவு காலதாமதம் ஆகாது. அடிக்கடி உங்களை சந்திக்க வருவேன். கொடி படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறேன். நீங்கள் குடும்பத்துடன் பார்க்க வேண்டும். படத்தை வெற்றி பெற செய்யுங்கள்” என்று இரசிகர்கள் மத்தியில் நடிகர் தனுஷ் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

பெண்களுக்கு ஜாக்பாட்.. இனி ரூ.1,000-க்கு பதில் 2,000? 2 நாளில் அறிவிப்பு.. அமைச்சர் குட்நியூஸ்!
சென்னையில் வரலாறு காணாத குளிர்..! மதியம் 1 மணிக்கும் டெல்லி, ஊட்டி போன்று நடுக்கம்!