
நெல்லை
கேரள மாநிலத்தில் இருந்து இராஜஸ்தானுக்கு சிறப்பு இரயில் விரைந்துச் சென்ற. இராணுவ வாகனங்கள் மற்றும் தளவாடங்களை நெல்லைச் சந்திப்பில் ஏராளமான மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
இந்திய இராணுவத்தின் சிறப்பு முகாம் கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் இருக்கின்றன. இந்த முகாமில் உள்ள இராணுவ கம்பெனிகளை உடனடியாக இராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு, இராணுவ உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்தது.
இதனைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள ஒரு இராணுவ கம்பெனியும், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு இராணுவ கம்பெனியும் ஒரு சிறப்பு இரயிலில் இராணுவத்திற்கு உரிய வாகனங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக் கொண்டு இராஜஸ்தானுக்கு தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.
புதன்கிழமை மதியம் நெல்லைச் சந்திப்பு வழியாக இரயில் நிலையத்திற்கு வந்தது அந்த சிறப்பு இரயில்.
இந்த இரயிலை சந்திப்பு மேம்பாலத்தில் நின்று ஏராளமானவர்கள் பார்த்து வியந்தனர்.
நெல்லை சந்திப்பு இரெயில் நிலையத்தில் இந்த இரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது மற்ற இரயில்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் இதனை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.