மருமகனுடன் சேர்ந்து கணவனை போட்டுத் தள்ளிய மனைவி… கள்ளக்காதல் படுத்தும் பாடு…

 
Published : Apr 03, 2018, 12:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
மருமகனுடன் சேர்ந்து கணவனை போட்டுத் தள்ளிய மனைவி… கள்ளக்காதல் படுத்தும் பாடு…

சுருக்கம்

Husband murdered by his wife and her lover

திருநெல்வேலி அருகே தனத கள்ளக் காதலனையே மருமகனாக்கிக் கொண்ட பெண் ஒருவர், கள்ளக காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி கோவிலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை. இவர்  கேரளாவில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி செல்வி மற்றும் மகள் ஜெயந்தி ஆகியோர் திருநெல்வேலியில் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் செல்விக்கு அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் குரு என்பவருக்கும் இடையே கள்ளக் காதல் இருந்து வந்துள்ளது. கணவர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் குருவுடன் செல்வி உல்லாசமாக இருந்துள்ளார்.

ஆனால் தனக்கும் குருவுக்கும் இடையே உள்ள கள்ள உறவை மறைப்பதற்காக தன்னுடைய மகளையே குருவுக்கு செல்வி திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

ஆனால்  குரு – செல்வி இடையே உள்ள இருந்த உறவு குறித்து அறிந்த தங்கதுரை, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செல்வியுடன் தங்கதுரை தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த செல்வி, குருவுடன் சேர்ந்து  கணவரை கடுமையாக தாக்கியுள்ளார். இருவரும் அவரை சாகும் வரை அடித்துள்ளனர்.

பின்னர் தங்கதுரையின் உடலை யாருக்கும் தெரியாமல்அப்புறப்படுத்த முடிவெடுத்துள்ளனர். ஆனால் இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் சேர்ந்த பொது மக்கள்  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தங்கதுரையின்  உடலை மீட்டு, போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து செல்வி, குரு இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

பேச்சுவார்த்தையில் ஏமாற்றம்.. ஜன. 6 முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் உறுதி!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!