4 மாத மனைவியை வெட்டி கொன்ற கணவன் - தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சி

Asianet News Tamil  
Published : Nov 05, 2016, 08:18 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
4 மாத மனைவியை வெட்டி கொன்ற கணவன் -  தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சி

சுருக்கம்

கடையநல்லூரில் கணவன் மனைவி தகராறில் 4 மாத இளம் மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன் தானும்  கழுத்தறுத்துகொண்டு தற்கொலைக்கு முயன்றான்.

கடையநல்லூரில் சற்று முன் நடைபெற்ற கொலைச் சம்பவம்  அப்பகுதியில் பெரும்  பரபரப்பை எற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் ரஹ்மானிய புரம் 3ம் தெருவில் வசிப்பவர் அப்துல் காதர் (27) . இவருக்கும் தஸ்லிமா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. 

ஆரம்பத்தில் சந்தோஷமாக சென்ற திருமண வாழ்க்கை போகப்போக  பிரச்சனை ஆரம்பித்தது. அவ்வப்போது பெரியவர்கள் பஞ்சாயத்து செய்து வைத்தும் பிரச்சனை தீரவில்லை. இந்நிலையில்  இன்று காலை கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில்  அப்துல் காதர் திடீரென மனைவி தஸ்லிமாவை அருகில் இருந்த அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்தார். 


ரத்தம் பீச்சியடிக்க மனைவி வேரறுந்த மரம் விழுந்து துடிக்க துடிக்க இறந்து போனதை பார்த்த அப்துல்காதர்  தானும் கழுத்தை அருத்து தற்கொலைக்கு முயற்ச்சித்துள்ளார், அபாயகரமான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அபாயகரமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமணமான 4 மாதத்தில் கணவனே மனைவியை கொன்றது கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சென்னைதான் எப்பவும் டாப்! போகிக்கும் பொங்கலுக்கும் சேர்த்து ரூ. 518 கோடி மது விற்பனை!
அனல் பறந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. குலுக்கல் முறையில் காரைத் தூக்கிய அஜித்! டிராக்டர் வென்ற குலமங்கலம் காளை!