“ராகுல்காந்தி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்”

 
Published : Nov 05, 2016, 06:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
 “ராகுல்காந்தி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்”

சுருக்கம்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் கைது செய்ததை கண்டித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கிருஷ்ணகிரியில் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கினை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றதது.

கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜேசுதுரை ராஜ் தலமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில்,

ஒரே பதவி, ஒரே ஊதியம் வழங்க வலியுறுத்தி தற்கொலை செய்து கெண்ட முன்னாள் ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த சென்ற அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை காவல்துறையினர்கள் கைது செய்தததைக் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்.

மேலும் இந்த கண்டன ஆர்பாட்டத்தின் போது மக்கள் விரோதப் போக்கினை தொடர்ந்து செய்து வரும் மோடியின் மத்திய அரசினைக் கண்டித்து கோசங்களை எழுப்பினார்கள்

இதில், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சேகர் மாவட்ட பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார தலைவர் பன்னீர் செல்வம் ஊத்தங்கரை வட்டார தலைவர் பாலக்ருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

PREV
click me!

Recommended Stories

வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!
அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்