‘கடன்கார ஆட்சியை அகற்ற திமுகவிற்கு வாக்களியுங்கள்’ - எ.வ.வேலு

 
Published : Nov 05, 2016, 06:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
‘கடன்கார ஆட்சியை அகற்ற திமுகவிற்கு வாக்களியுங்கள்’ - எ.வ.வேலு

சுருக்கம்

தமிழகத்தில் உள்ள கடன்கார ஆட்சியை அகற்ற வேண்டுமென்றால் திமுக வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேட்டு கொண்டார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல்  திமுக பிரச்சார  கூட்டம் மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்றது.

இந்தகூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். அப்போது, கடன்கார ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

ஏற்கனவே இரண்டரை லட்சம் கோடி கடனை தமிழக மக்கள் மீது சுமத்தி இருக்கும் தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களான போக்குவரத்துதுறை மற்றும் மின்சாரத்துறையில் உள்ள கடன்களையும் சேர்த்தால் 4 லட்சத்து 11 ஆயிரம் கோடி கடன் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த கடன்கள் தீர வேண்டும் எனில் அரவக்குறிச்சி மக்கள் திமுகவிற்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார்.

 

PREV
click me!

Recommended Stories

டிசம்பர் மாதத்தில் மழை எப்படி இருக்கும்? அடுத்தடுத்து உருவாகும் புயல்? டெல்டா வெதர்மேன் முக்கிய தகவல்
விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!