பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் கணவர் இறப்பு; நேரில் பார்த்த மனைவி அதிர்ச்சியில் மயக்கம்…

Asianet News Tamil  
Published : Sep 18, 2017, 10:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் கணவர் இறப்பு; நேரில் பார்த்த மனைவி அதிர்ச்சியில் மயக்கம்…

சுருக்கம்

Husband death in the passenger passport The watched wife is shocked

திருச்சி

திருச்சியில் அரசு பேருந்து கணவர் மீது ஏறி இறங்கி இறந்ததை நேரில் பார்த்த மனைவி அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தாளியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல் (35). இவர் ஊட்டியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தேவிகா (30). இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு குழந்தை உள்ளது.

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக குமரவேல் சொந்த கிராமத்திற்கு வந்திருந்தார். பின்னர் கணவர் - மனைவி இருவரும் நேற்று திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஜீயபுரம் பழுர் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, கோவையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்திச் செல்ல முயன்றது.

அப்போது குமரவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பேருந்து வேகமாக மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த குமரவேலின் உடலின் மீது பேருந்தின் முன் சக்கரம் ஏறி இறங்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் தேவிகா உயிர்தப்பினாலும், பேருந்து ஏறி இறங்கி கணவர் இறந்ததைப் பார்த்ததும் அங்கேயே அவர் மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் காவலாளர்கள் தேவிகாவை மீட்டு அவசர ஊர்தி மூலம் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர், குமரவேலின் உடலும் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து ஜீயபுரம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து தொட்டியம் பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சின்னத்தம்பி (51) கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு அதிர்ச்சி... இதுதான் கடைசி சான்ஸ்... விஜயதாரணி எடுத்த பகீர் முடிவு..!
காத்து வாங்கிய காங்கிரஸ் மீட்டிங்.. விஜய்க்கு வாய்ஸ் கொடுத்த எம்.பி.க்கள் டோட்டல் எஸ்கேப்.. அப்போ அதானா?