
சேலம்
சேலத்தில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறால் தன்னை வெட்ட வந்த மனைவியிடம் இருந்து தற்காத்துக் கொள்ள கடப்பாரையால் மனைவியை குத்திக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ளது பாப்பம்பாடி கசப்புஏரி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (52). இவர் ஒரு விசைத்தறி உரிமையாளர். இவருடைய மனைவி வள்ளி (45). இவர்களுக்கு ஐஸ்வர்யா, கௌசல்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவி வள்ளியை மாரிமுத்து கடப்பாரையால் குத்தி கொலை செய்தாராம். பின்னர், தாரமங்கலம் காவல் நிலையத்திற்குச் சென்று தாமாகவெ சரணடைந்துள்ளார்.
இதுகுறித்து தாரமங்கலம் காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, உதவி ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் காவலாளாரள் வழக்குப்பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனர்.
கைதான மாரிமுத்து காவலாளர்களிடம் அளித்த வாக்குமூலம்:
"எனது வீட்டில் இரண்டு விசைத்தறிகளை அமைத்து தொழில் செய்து வந்தேன். அந்த விசைத்தறிகளை எனது மனைவி வள்ளி கவனித்து வந்தார். அவர் நெய்து கொடுக்கும் சேலைகளை நான் கடைகளில் விற்று பணம் வசூலித்து வந்தேன்.
ஆனால், வீட்டிற்கு கொண்டு வரும் பணத்தை எனது மனைவி எடுத்துக் கொள்வாள். எங்கே பணம்? யாரிடம் கொடுத்தாய்? என்று கேட்டால் சரியான பதில் சொல்வதும் இல்லை.
மேலும், எனது செல்போனை எடுத்து யாருடனோ அடிக்கடி பேசி வந்தாள். பின்னர் அவர் பேசிய செல்போன் எண்ணை அழித்துவிட்டுதான் என்னிடம் கொடுப்பாள். யாரிடம் பேசினாய்? என்று கேட்டால் அதற்கு என்னை தகாத வார்த்தைகளில் திட்டிவிட்டு சென்று விடுவாள். இது தொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று அதிகாலை இதுதொடர்பாக எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த வள்ளி கொடுவாளை எடுத்து என்னை வெட்டிக் கொல்ல முயன்றாள். சிறிது தாமதித்து இருந்தால் என்னை வெட்டி கொன்றிருப்பாள்.
உடனே, நான் அவளை கீழே தள்ளி விட்டேன். மேலும், இனியும் விட்டுவைத்தால் என்னை கொன்று விடுவாள் என்று பயந்து வீட்டில் கிடந்த கடப்பாரையை எடுத்து வள்ளியை குத்திக் கொன்றேன்" என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து கைதான மாரிமுத்துவை காவலாளர்கள் நேற்று காலை ஓமலூர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.