
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் முகநூல் பார்த்ததை கணவன் கண்டித்ததால் மனைவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா ஆர்.எஸ்.மங்ககலம் அருகேயுள்ளது தெற்குனேந்தல் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஜஸ்டின் தங்கதுரை (42).
இவருடைய மனைவி அருள் ஜோதி. இவர் அடிக்கடி முகநூல் (ஃபேஸ்புக்) பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தாராம். இதனால், கடுப்பான கணவர் தங்கதுரை, ஜோதியை கண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த அருள்ஜோதி திங்கள்கிழமை எலி மருந்து சாப்பிட்டுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் ஜோதியை காணாததால், அவரை தேடி பார்த்துள்ளார் தங்கதுரை.
அப்போது மயத்துடன் ஆபத்தான நிலையில் இருந்த ஜோதியை கண்டு அதிர்ச்சி அடைதார் தங்கதுரை. உடனே, ஜோதியை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு ஜோதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கணவர் அளித்தப் புகாரின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் காவலாளர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகநூல் பார்த்ததை கண்டித்ததால் மனைவி எலி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.