விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவராணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல்; இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு...

 
Published : Dec 27, 2017, 07:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவராணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல்; இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு...

சுருக்கம்

Relatives asked relief for victims family who died in accident

புதுக்கோட்டை

மதுராந்தகத்தில் விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பத்திற்கும் நிவராணம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுக்கோட்டையில் அவர்களது இறந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம் அருகே விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு உடனடியாக நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், செம்பாட்டூரில் இறந்தவர்களின் உறவினர்கள் நேற்று மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் குறித்து தகவலறிந்து புதுக்கோட்டை வட்டாட்சியர் தமிழ்மணி, வெள்ளனூர் காவலாளர்கள் நிகழ்விடத்திற்கு சென்றனர்.

அங்கு சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தையில் நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் செம்பாட்டூர்  - செங்கிப்பட்டி சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, காங்கிரசு கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் செம்பாட்டூர் சென்று, இறந்தவர்ககளின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

உயிரிழந்த ஐந்து பேரும் திருநாவுக்கரசரின் உதவியாளர் குமாரின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளுக்கு கொத்தாக 9 நாட்கள் விடுமுறை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாட்டம்!
மகாத்மா காந்தி மீது வன்மம்.. 100 நாள் வேலை திட்டம் மாற்றத்துக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!