இளைஞர்களின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தினால்தான் ஏற்றத்தாழ்வற்ற சமூகம் உருவாகும் -தமிழ்நாடு அறிவியல் இயக்கம்...

First Published Dec 27, 2017, 7:48 AM IST
Highlights
The inadequacy of society is created only when it comes to utilizing the power of youth -


புதுக்கோட்டை

இளைஞர்களின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தினால்தான் ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை உருவாக்க முடியும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க கூட்டத்தில் அதன் மாநிலப் பொதுச் செயலர் அ.அமலராஜன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கூட்டம் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் அதன் மாநிலப் பொதுச் செயலர் அ.அமலராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியது: "இளைஞர்கள் சாதி, மதம், இனம், மொழி கடந்து சமூகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.

ஆரோக்கியமான சமூகம் உருவாக இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. சமூக ஒற்றுமை, வளர்ச்சி, நீதிக்காக நாம் இணைய வேண்டும்.

இந்தியா பன்முக கலாசாரம் கொண்ட நாடு. இந்தியாவில் வாழும் அனைவரும் இந்தியர்களே. நம்மிடையே உள்ள தனித்தன்மையை போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

இளைஞர்களின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை உருவாக்க முடியும்" என்று பேசினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு அறிவியல் இயக்கம் குறித்த விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலர் எம்.தியாகராஜன், மாவட்டச் செயலர் வீரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

click me!