பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி?. உடன் சென்ற ஆய்வாளர் முனிசேகர் ராஜஸ்தான் போலீசில் புகார். 

 
Published : Dec 16, 2017, 08:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி?. உடன் சென்ற ஆய்வாளர் முனிசேகர் ராஜஸ்தான் போலீசில் புகார். 

சுருக்கம்

How was periya pandi shot dead

சென்னை, கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை  தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது.

கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, ஆய்வாளர் பெரியபாண்டியன் மட்டும் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி வீர  மரணம்  அடைந்தார்.

தற்போது இவருடைய  மரணத்தில்  பல  முக்கிய சந்தேகங்கள் எழுந்துள்ளது. அதாவது, கொள்ளையர்கள் இன்ஸ்பெக்டர் முனிசாமியின் துப்பாக்கியை எடுத்து பெரியபாண்டியனைச் சுடும்போது சக போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தார்கள், கொள்ளையர்களை ஏன் சக போலீஸார் சுடவில்லை,தமிழக போலீஸாரின் துப்பாக்கியை எடுத்து இன்ஸ்பெக்டர்களை கொள்ளையர்கள் சுடும் அளவுக்குக் கவனக்குறைவாக இருந்தது ஏன், முனிசேகர்  எப்படி படுகாயமடைந்தார் உள்ளிட்ட கேள்விகள் எழும்பியிருந்தன. 

இந்நிலையில், இதுகுறித்து ஆய்வாளர் முனிசேகர் ராஜஸ்தான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், 3 பெண்கள் உட்பட 5 பேர் கட்டை, இரும்புக் கம்பியால் போலீசாரை தாக்கினர். 

கொள்ளையர்கள் தாக்கியதில் தன்னுடைய துப்பாக்கி தவறி விழுந்தது. கொள்ளையர்களின் தாக்குதலையடுத்து எல்லோரும் தப்பிவிட தவறி விழுந்த என்னுடைய துப்பாக்கியை ஆய்வாளர் பெரியபாண்டியன் எடுத்தார். அவர்கள் மத்தியில் பெரியபாண்டியன் சிக்கிக் கொண்டார்.

இதைதொடர்ந்து துப்பாக்கி  வெடிக்கும் சப்தம் கேட்டது. உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் பெரிய பாண்டியன் இறந்து கிடந்தார். பெரியபாண்டியனை கொள்ளையர்கள் சுட்டதாக முனிசேகர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!