களமிறங்குகிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் - சிக்குவாரா அன்புச்செழியன்..!

 
Published : Dec 16, 2017, 06:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
களமிறங்குகிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் - சிக்குவாரா அன்புச்செழியன்..!

சுருக்கம்

Azhokkumars suicide case has been shifted to Central Crime Branch.

அசோக்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக தேடப்படும் அன்புசெழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சினிமா இணை தயாரிப்பாளரும், நடிகர் சசிகுமாரின் உறனிருமான அசோக்குமார், கந்துவட்டி பிரச்சனை காரணமாக சென்னை, வளசரவாக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

நெல்லையில், கந்துவட்டி கொடுமை காரணமாக இசக்கிமுத்து என்பவர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், சினிமா இணை தயாரிப்ளர் அசோக்குமார், கந்துவட்டி பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அன்புச்செழியன் தலைமறைவானார். அவர் மீது நடிகர் சசிகுமார் உள்ளிட்ட பலர் புகார் கொடுத்துள்ளனர். 

இந்த நிலையில், தலைமறைவான அன்புச்செழியனைப் பிடிக்க, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். பெங்களூரு, ஹைதராபாத், மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் தேடுல் வேட்டையில் ஈடுபட்டனர். 

ஆனால் அன்புச்செழியன் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. உதகையில் அன்புச்செழியன் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்ற போலீசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதேபோல் மதுரையில் தகவல் கிடைத்து சென்ற போலீசாருக்கு ஏமாற்றமே கிட்டியது.

இதையடுத்து, ஐதராபாத், பெங்களூரு என தகவல் கிடைக்கும் இடத்துக்கெல்லம் தனிப்படை போலீசார் சென்றனர். ஆனாலும், போலீசாரால் அவரைப் பிடிக்க முடியவில்லை. 

இந்நிலையில், அசோக்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக தேடப்படும் அன்புசெழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இந்துகளுக்கு தீபம் ஏற்ற உரிமை இல்லையா..? தன்னையே மாய்த்து கொண்ட மதுரை இளைஞரின் விபரீத முடிவு..
தமிழகத்தில் 88 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..? இன்று வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்..!