இன்றைய தேதியில் ஓட்டுநர் உரிமம் என்பது, மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது என்றால் அது நிச்சயம் மிகையல்ல. ஆனால் அந்த ஓட்டுநர் உரிமத்தை பெற, கால்கடுக்க அரசு அலுவலகத்தில் நிற்காமல், நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் டிரைவிங் லைசென்ஸ் வாங்கலாம் தெரியுமா?
சரி ஆன்லைன் மூலம் அப்ளை செய்து எப்படி டிரைவிங் லைசென்ஸ் வாங்கலாம் என்பதை பின்வருமாறு காணலாம்.
முதலில் இந்திய அரசின் இணையத்திற்கு செல்ல வேண்டும்
புதிய டிரைவிங் லைசென்ஸ் பெற முதலில், sarathi.parivahan.gov.in/sarathiservice/stateSelection.do என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு, கீழ் உள்ள Select State என்ற பட்டனை கிளிக் செய்து, அதில் தமிழ்நாடு என்று தேர்வு செய்யவேண்டும். பிறகு LLR அல்லது டிரைவிங் லைசென்ஸ் பெற தனித்தனியே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டன்களை கிளிக் செய்து உரிய சேவைகளை பெறலாம்.
தென் மாவட்ட மக்களுக்கு நற்செய்தி; சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் நாளை சோதனை ஓட்டம்
டிரைவிங் லைசென்ஸ்
டிரைவிங் லைசென்ஸ் என்ற பட்டனை நீங்கள் கிளிக் செய்ததும் அதில் 7 முக்கிய விஷங்கள் குறித்த குறிப்புகள் இருக்கும். அவை அனைத்தையும் பயனர்கள் பூர்த்தி செய்யவேண்டும். முதலில் பயனர்களின் விவரம் அதாவது Applicants Details குறித்து கேட்டகப்பாட்டிற்கும் அனைத்து விவரங்களையும் பதிவு செய்யவேண்டும். டிரைவிங் லைசென்ஸ் பெற LLR நம்பர் மிகவும் முக்கியம், ஆகவே LLR அப்ளை செய்த பின்னரே டிரைவிங் லைசென்ஸிற்கு விண்ணப்பிக்கமுடியும்.
ஆவணங்கள் பதிவேற்றம்
வெற்றிகரமாக விண்ணப்பதாரரின் தகவல்களை அளித்தவுடன், உரிய ஆவணங்களை பதிவேற்றவேண்டும். குறிப்பாக புகைப்படம், முகவரி சான்று, வயது சான்று போன்றவற்றை அப்லோட் செய்யவேண்டும். நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முன்பே இந்த சான்றுகளை கைவசம் வைத்துக்கொள்வது நல்லது.
கையொப்பம் மற்றும் புகைப்படம் பதிவேற்றம்
அரசு குறிப்பிட்ட அளவுகள் மற்றும் நிறத்தில் உங்கள் புகைப்படம் மற்றும் கையெழுத்தை அப்லோட் செய்யவேண்டும்.
தேர்வுக்கு பதிவு
அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்த பிறகு நேரடி டிரைவிங் தேர்வுக்கான ஸ்லோட்டை நீங்கள் புக் செய்யவேண்டும்.
ஆன்லைன் மூலம் பணம் செலுத்துதல்
லைசென்ஸ் பெற தேவையான பணத்தை ஆன்லைன் மூலமே நீங்கள் செலுத்தலாம். மறக்காமல் அதற்கான ரசீதை பிரிண்ட் எடுத்துவைத்துக்கொள்ளவேண்டும்.
நேர்முக தேர்வு
அனைத்து ஆன்லைன் பதிவுகளும் முடித்தபிறகு, நேர்முக தேர்வை வெற்றிகரமாக முடித்தபின் உங்களுக்கு, தபால் மூலம் உங்கள் டிரைவிங் லைசென்ஸ் அனுப்பி வைக்கப்படும்.
நீட் விவகாரம்: பெர்சண்டேஜ், பெர்சண்டைல் என்ன வித்தியாசம்?