2024 ஆம் ஆண்டு எத்தனை நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு வெளியிட்ட பட்டியல்!

By Manikanda Prabu  |  First Published Nov 10, 2023, 5:26 PM IST

2024ஆம் ஆண்டுகளுக்கான அரசு விடுமுறை பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது


ஒவ்வொரு ஆண்டின் இறுதி மாதங்களில் அதற்கு அடுத்து பிறக்கும் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டு துவங்க இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 2024ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 24 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை 6 நாட்களும், செவ்வாய்கிழமை 2 நாட்களும், புதன்கிழமை 5 நாட்களும், வியாழக்கிழமை 4 நாட்களும், வெள்ளிக்கிழமை 3 நாட்களும், சனிக்கிழமை 2 நாட்களும், ஞாயிற்றுக்கிழமை 2 நாட்களும் விடுமுறை நாட்களாக அமைந்துள்ளது.

Tap to resize

Latest Videos

 

2024ம் ஆண்டுகளுக்கான அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு pic.twitter.com/2lQMYl2M0d

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

 

அரசு பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்படும்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலின்படி, ஜனவரி மாதத்தில் ஆங்கிலப் புத்தாண்டு தினமான திங்கள்கிழமை, பொங்கல் பண்டிகையையொட்டி 15,16,17 ஆகிய தினங்கள் முறையே திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாநில தொழிலாளர்கள் போலி வீடியோ விவகாரம்: யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீதான வழக்கு ரத்து!

அதேபோல், தை பூசம், குடியரசு தினம், புனித வெள்ளி, வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, தெலுங்கு வருடப்பிறப்பு, ரம்ஜான், தமிழ் புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தி, மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் என்பன உள்ளிட்ட மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!