
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் பூட்டிக் கிடந்த வீட்டின் கதவை உடைத்து 25 சவரன் நகை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி புறநகர் பகுதியில் எம்.ஜி.ஆர் நகர் உள்ளது. இங்கு நயினார் - கண்ணகி தம்பதி வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இருவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இருவரும் தென்காசியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். நேற்று நயினார் வீட்டின் பின்புற கதவு திறந்து கிடப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர்.
உடனே நயினாருக்கும், பழனி நகர் காவல்துறைக்கும் அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். காவலாளர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த இரண்டு பீரோக்களும் உடைக்கப்பட்டுக் கிடந்தன.
பின்னர், காவலாளர்கல் நடத்திய விசாரணையில் வீட்டில் இருந்த 25 சவரன் நகை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பழனி நகர காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பூட்டிக் கிடந்த வீட்டின் பின்புற கதவை உடைத்து நகை, பணம் திருடுபோன சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.