‘காலாட்படை தினத்தையொட்டி ராணுவ வீரர்களுக்கு மரியாதை’ – முன்னாள் ராணுவ வீரர்களும் பங்கேற்பு

Asianet News Tamil  
Published : Oct 28, 2016, 03:12 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
 ‘காலாட்படை தினத்தையொட்டி ராணுவ வீரர்களுக்கு மரியாதை’ – முன்னாள் ராணுவ வீரர்களும் பங்கேற்பு

சுருக்கம்

காலாட்படை தினத்தை முன்னிட்டு  குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில்  போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

1947ம் ஆண்டு ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு காஷ்மீர் பள்ள தாக்கை நமது ராணுவ வீரர்கள் மீட்டனர். இவர்களின் இந்த வீரதீர செயலை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ம் தேதி இந்திய ராணுவத்தின் காலாட்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி  நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ வீரர்களின் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் ராணுவ கல்லூரியின் முதன்மை கமாண்டர் பிரிகேடியர் ராத்தோர் மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் தலைமை பிரிகேடியர் சாங்குவான் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதில் முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு உயிர் நீத்த  ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

 

PREV
click me!

Recommended Stories

டெல்லியில் அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு.. பேசியது என்ன? கசிந்த அதிரடித் தகவல்கள்!
ஜோதிமணி எம்.பி.யிடம் கேள்வி கேட்ட இளைஞருக்கு மிரட்டல்.. பரபரப்பு வீடியோ! நடந்தது என்ன?