மகிழ்ச்சி..! வரும் மார்ச் 22 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

Published : Mar 19, 2022, 06:10 PM IST
மகிழ்ச்சி..! வரும் மார்ச் 22 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

சுருக்கம்

பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 22 ஆம் தேதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 22 ஆம் தேதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று  காரணமாக பக்தர்கள் இன்றி குண்டம் திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால், தமிழகத்தில் கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா பக்தர்கள் அனுமதியுடன் தொடங்கியுள்ளது. அதாவது கடந்த மார்ச் 7 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் குண்டம் திருவிழா விமர்சையாக தொடங்கியது.அதனைத் தொடர்ந்து மார்ச் 15 ஆம் தேதி அம்மன் சப்பரம் திருவீதி உலாவும், திருகம்பம் சாட்டுதலும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் வரும் மார்ச் 21 ஆம் தேதி தீக்குண்டம் வார்ப்பு விழாவும் 22 ஆம் தேதி அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. இதனால் குண்டம் திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 22 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்ணி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். 

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த தேர்வும் வழக்கம் போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் வங்கிகளும் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் மாட்டுவண்டியில் பாரம்பரிய முறைப்படி வந்து அம்மனை தரிசிப்பது வழக்கம். இந்த வருடமும் விவசாயிகள் மாட்டு வண்டியில் வரலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பண்ணாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!