School Leave : வெளுத்து வாங்கும் கன மழை.. 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Published : Dec 18, 2023, 06:36 AM IST
School Leave : வெளுத்து வாங்கும் கன மழை.. 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சுருக்கம்

நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழையானது கொட்டித்தீர்த்து வருவதால் அனைத்து பகுதியும் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது  

கொட்டித்தீர்த்த மழை

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறி ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்த நேற்று முன் தினம் இரவில் தொடங்கிய மழையானது கொட்டி வருகிறது. இதனால் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 84 புள்ளி 5 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.  திருச்செந்தூர் - 66.9 செ.மீ பதிவாகியுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

மேலும்  தொடரும் மழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் கடந்து  வெள்ளம் பாய்ந்தோடுவதால்  மக்கள் முகாம்களுக்கு செல்லுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே கடும் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தொடர் கனமழை காரணமாக தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

வரலாறு காணாத மழையால் வெள்ளத்தில் மூழ்கிய நெல்லை,தூத்துக்குடி.! தாமிரபரணியில் கடும் வெள்ளம்- மீட்பு பணி தீவிரம்
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!