
மானாமதுரையில் உள்ள இரயில் நிலையத்தில் இருக்கும் பறவைகளுக்கு மூன்று ஆண்டுகளாக வடையைச் சாப்பிடக் கொடுத்து நட்பாக பழகி வருகிறார் வங்கி ஊழியர் ஒருவர்.
மானாமதுரையில் காலையில் நடைபயிற்சியின்போது பறவைகளுக்கு வங்கி ஊழியர் ஒருவர் இரை வழங்கி வருகிறார்.
மானாமதுரை இரயில் நிலையத்தில் தினமும் அதிகாலை 6 மணி முதல் 8 மணி வரை ஏராளமானோர் நடைபயிற்சி செல்கின்றனர்.
மானாமதுரை இரயில்வே காலனியில் வசித்துவரும் பாண்டியன் கிராம வங்கி ஊழியர் வெங்கடாசலமும் இங்கு நடைபயிற்சி செல்கின்றார்.
தினமும் இரயில் நிலையத்திற்கு நடைபயிற்சி செல்ல வரும் வெங்கடாச்சலம் வீட்டிலிருந்து வரும்போது கடையில் வடைகளை வாங்கி வருகிறார். இரயில் நிலைய நடைமேடையில் இவர் நுழைந்ததும் காக்கை உள்ளிட்ட பறவைகள் குரலி எழுப்பியபடி அவரைச் சுற்றி பறந்து வருகின்றன. இவர் தன்னிடமுள்ள வடைகளை துண்டுகளாக்கி கீழே போட்டதும் பறவைகள் கூடி சாப்பிட்டுவிட்டு பறந்து சென்றுவிடுகின்றன.
இது குறித்து வெங்கடாச்சலம் கூறுகையில் “பறவைகளுக்கு கடந்த மூன்றாண்டுகளாக காலையில் வடையை கொடுத்து வருகிறேன். பறவைகளும் என்னைக் கண்டவுடன் ஆவலாக என்னைச் சூழ்ந்து கொள்ளுன். பறவைகள் அந்த வடையைச் சாப்பிடும்போது மனம் நிறவடைந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது” என்றுத் தெரிவித்தார்.