மோதவந்த ஆட்டோ ஓட்டுநரை தட்டிக் கேட்ட மருத்துவரை தாக்கிய ஓட்டுநர்…

 
Published : Dec 19, 2016, 11:48 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
மோதவந்த ஆட்டோ ஓட்டுநரை தட்டிக் கேட்ட மருத்துவரை தாக்கிய ஓட்டுநர்…

சுருக்கம்

சேலம்,

சேலம் அரசு மருத்துவமனையில், மேலே மோதுவதுபோல வந்த ஆட்டோ ஓட்டுநரை தட்டிக் கேட்ட மருத்துவரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை காவலாளர்கள் கைது செய்தனர்.

சேலம் அரசு மருத்துவ பிரேத பரிசோதனை கூடத்தில் மருத்துவராக பணியாற்றி வருபவர் சிவானந்தம் (37). இவர் மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆட்டோ ஒன்று மருத்துவர் மீது மோதுவது போல் வந்தது. இதுதொடர்பாக அவர் ஆட்டோ ஓட்டுநரிடம் தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர், மருத்துவர் சிவானந்தத்தை தாக்கியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், மருத்துவரை தாக்கிய சேலம் மேட்டு மக்கான் தெருவை சேர்ந்த ரபீக் (24) என்பவரை காவலாளர்கள் கைது செய்தனர்.

இதுகுறித்து, ரபீக்கிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"
மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு ...அதை வாக்குறுதியாக கொடுப்போம் ! MP கனிமொழி பேட்டி