ஆங்கில ஊடகங்களையும் அசைத்த ஆசிரியர் பகவான்…. பாராட்டும் பாலிவுட் பிரபலங்கள்….

Asianet News Tamil  
Published : Jun 22, 2018, 11:42 AM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
ஆங்கில ஊடகங்களையும் அசைத்த ஆசிரியர் பகவான்…. பாராட்டும் பாலிவுட் பிரபலங்கள்….

சுருக்கம்

Hirithik roshan and a.r.rahman congrats Bhagavan teacher

திருவள்ளூர் அருகே நண்பனாகவும், பெற்றோராகவும் நடந்து மாணவர்களின் அன்புக்கு அடிமையான ஆசிரியர் பகவானை ஆங்கில ஊடகங்களும், பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் மற்றும் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டித் தள்ளியுள்ளனர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டை அடுத்த வெளியகரம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300 க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். இந்தப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பகவான் என்ற இளைஞர் 5 ஆண்டுகளுக்கு முன் பணிக்கு வந்தார். மாணவ மாணவிகளுக்கு சக தோழனாக இருந்து அவர் கல்வி கற்றுத்தர ஆங்கிலப் பாடம் அனைத்து மாணவர்களுக்கும் பிடித்தமான பாடமானது.

பாடம் எடுப்பதில் அவரது அணுகுமுறை, பழகுவதில் கண்ணியம், வழிகாட்டுவதில் எடுத்துக்கொண்ட சிரத்தை காரணமாக அனைத்து வகுப்பு மாணவ மாணவியருக்கு பிடித்தமானவராக மாறிப்போனார் பகவான். இந்நிலையில்தான் பகவானுக்கு பணியிட மாறுதல் கிடைத்தது.

இதை அறிந்த மாணவ மாணவியர்கள் கதறி அழுதனர். நீங்கள் பள்ளியை விட்டு போகக் கூடாது, நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். ஆனால் பணியிட மாற்றம் பெற்றதால் அதற்கான ஆர்டரை வாங்கப் பள்ளிக்கு வந்தார்.

இதை அறிந்த அனைத்து பள்ளி மாணவ, மாணவியரும் வகுப்புகளைப் புறக்கணித்து அவர் முன்னால் அமர்ந்து பள்ளியை விட்டுப் போகாதீர்கள் என்று அழுதனர். அவர்களுக்கு சமாதானம் கூறிய ஆசிரியர் பகவான் ஒரு கட்டத்தில் அவர்களது அன்பை எண்ணி அவரும் கண்ணீர் விட்டு அழுதார். ஆனால் மாணவ, மாணவியர் அவரை சூழ்ந்துகொண்டு கட்டிப்பிடித்தபடி எங்களை விட்டுப் போகாதீர்கள் சார் என்று கதறி அழுதனர்.

இதனால் அவர் வெளியே செல்ல முடியவில்லை. மற்ற ஆசிரியர்கள் வந்து சமாதானம் செய்தும் மாணவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் போலீஸை வரவழைத்து சமாதானப்படுத்தி பின்னர் ஆசிரியரைப் போக அனுமதித்தனர்.

இதையடுத்து பகவானின் இடமாற்ற உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரி தற்பது நிறுத்தி வைத்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில்  வைரலானது. பொது மக்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். தமிழ், மலையாளம், கன்னடம் மட்டுமல்லாமல் ஆங்கில ஊடகங்களும் இந்த சம்பவத்தை வெளியிட்டு பாராட்டின.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன், ஆசிரியர் மாணவர் இடையிலான இந்த உறவும், உணர்வும் நெஞ்சை உருக்குகிறது என தெரிவித்துள்ளார்.

இதே போன்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், குரு, சிஷ்யா என பதிவிட்டு பகவான் ஆசிரியருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இது போன்று அனைத்துத் தரப்பு மக்களும் பகவானுக்கு  பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழகத்தில் இல்லை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்