10 அயிரம் பேர் ஆப்சென்ட் எனும் தகவல் தவறு..அனைவரது விடைத்தாள்களும் திருத்தப்படும்- அமைச்சர் பரபரப்பு பேட்டி..

By Thanalakshmi VFirst Published Mar 20, 2022, 2:40 PM IST
Highlights

அண்ணா பல்கலைகழகத்தில் ஆன்லைன் தேர்வில் தாமதமாக விடைத்தாள்கள் அனுப்பியதால் 10 ஆயிரம் மாணவர்களுக்கு அப்செண்ட் போடப்பட்டது என்று பரவிய தகவல் தவறானது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். மேலும் அனைத்து மாணவர்களது வினாத்தாள்களும் திருத்தப்பட்டு விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
 

அண்ணா பல்கலைகழகத்தில் ஆன்லைன் தேர்வில் தாமதமாக விடைத்தாள்கள் அனுப்பியதால் 10 ஆயிரம் மாணவர்களுக்கு அப்செண்ட் போடப்பட்டது என்று பரவிய தகவல் தவறானது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். மேலும் அனைத்து மாணவர்களது வினாத்தாள்களும் திருத்தப்பட்டு விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.இதனால் இறுதிபருவ செமஸ்டர் தவிர மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இதன் காரணமாக மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் " ஓப்பன் புக் தேர்வு " நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, ஜனவரி மாதம் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தொடங்கியது. மேலும் ஆன்லைன் தேர்வில், குறிப்பிட்ட நேரத்திற்குள் மாணவர்கள் தேர்வு எழுதி விடைத்தாள்களை ஆன்லைன் மூலமாக சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யாத காரணத்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆப்சென்ட் போட்டுள்ளதாக தகவல் வெளியாகின. 

இதனால் சரியான நேரத்திற்குள் பதிவேற்றம் செய்யாததால் அனைவருக்கும் தேர்வில் அரியர் போட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் விடைத்தாளை அனுப்பி வைக்காததால் மதிப்பீடு செய்யப்படவில்லை என பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தாமதமாக பதிவேற்றம் செய்த மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டு, மதிப்பெண் வழங்கப்படும் என்று அவர் கூறினார். மேலும் ஆன்லைன் தேர்வுகள் மூலம் கல்வித் தரம் பாதிக்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் இனி நேரடித் தேர்தல்கள் மட்டுமே நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், தாமதமாக விடைத்தாள்கள் அனுப்பியதால் 10 ஆயிரம் மாணவர்கள் தோல்வி என்ற தகவல் தவறானது என்று விளக்கம் அளித்தார். ஏனவே மாணவர்கள் கவலைப்பட வேண்டாம், அனைவரது விடைத்தாள்களும் திருத்தபட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.இனி அரசு பள்ளிகளில் மாணவர்கள் படிப்பதற்கு, இடம் கிடைப்பது மிக கடினமாக இருக்கும் என்றார்.ஏனெனில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு அறிவித்துள்ள நல திட்டங்களினால் அதிகமானோர் இனி அரசு பள்ளியை நோக்கி வருவர் என்று தெரிவித்தார். 

மேலும் படிக்க: 10 ஆயிரம் மாணவர்களுக்கு ‘ஆப்பு’ வைத்த அண்ணா பல்கலைக்கழகம்.. மறுபடியும் அரியர்..மாணவர்கள் ஷாக் !

click me!