தடுப்பூசி போடலனா பள்ளிக்கு போகாதீங்க… ஆசியர்களுக்கு ஷாக் கொடுத்த உயர்நீதிமன்றம்!!

By Narendran SFirst Published Nov 22, 2021, 5:22 PM IST
Highlights

தடுப்பூசி செலுத்த விருப்பம் இல்லாத ஆசிரியர்கள் பிறர் நலன் கருதி வீட்டிலேயே இருப்பது தான் சிறந்தது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

தடுப்பூசி செலுத்த விருப்பம் இல்லாத ஆசிரியர்கள் பிறர் நலன் கருதி வீட்டிலேயே இருப்பது தான் சிறந்தது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு என்னும் நிலையில் பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது. இதை அடுத்து மக்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தடுப்பூசியின் முக்கியத்துவத்தை புரிந்துக்கொண்டு அதனை செலுத்திக்கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய 10 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை 100 கோடிக்கும் மேலான டோஸ்  தடுப்பூசி போடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் தடுப்பூசி போடும் பணி மிக துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டாத மக்கள், பிறகு கூட்டம் கூட்டமாக போட்டுக்கொள்ள தொடங்கினர். இதனால், பொது மக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் தடுப்பூசி மெகா முகாம்களுக்கு  ஏற்பாடு தடுப்பூசி போட வசதியாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூடுதலாக மையங்கள் அமைத்து மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை பத்து தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அன்மையில் கூறப்படுகிறது. மேலும் ஆசிரியர்கள், பள்ளியில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  இதை அடுத்து கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசியை கட்டாயப்படுத்தக் கூடாது என கல்வி வள மேம்பாடு அறக்கட்டளை அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், கொரோனா தடுப்பூசியை தனாக முன் வந்து செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்திய நிலையில், தமிழகத்தில், கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசியை தமிழக அரசு கட்டாயப்படுத்துகிறது. இதுகுறித்தான சர்க்குலர்கள் அனுபப்பட்டுள்ளது. ஒரு சிலர் பாரம்பரிய மருத்துகளை விரும்புவார்கள். ஆகவே கட்டாயம் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று வலியுறுத்த கூடாது என்று உத்தரவிடவேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இவ்வழக்கில் என்ன பொது நலன் உள்ளது என்று கேள்வி எழுப்பினர். மேலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல விரும்பினால், மாணவர்கள் நலன் கருதி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாத ஆசிரியர்கள் பிறர் நலன் கருதி வீட்டிலேயே இருப்பது தான் சிறந்தது என்றும் தெரிவித்த நீதிபதிகள், தடுப்பூசியை இலவசமாக போட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியதை சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும் 2 தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் பிற்காலத்தில் மாற்று கூட வரலாம் என்றும் மாணவர்களின் நலன் கருதியே தமிழக அரசு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது என்றும் தெரிவித்த நீதிபதிகள், கல்வி வள மேம்பாடு அறக்கட்டளை அமைப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

click me!