#Breaking | எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது… கமல்ஹாசன் கொடுத்த அதிர்ச்சி!!

Published : Nov 22, 2021, 03:31 PM ISTUpdated : Nov 22, 2021, 03:35 PM IST
#Breaking | எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது… கமல்ஹாசன் கொடுத்த அதிர்ச்சி!!

சுருக்கம்

தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மக்களை கடந்த 2 ஆண்டுகளாக தனது பிடியில் வைத்துள்ள கொரோனா கொரோனா வைரஸ் தற்போது டெல்டா வகை கொரோனா வைரசாக உருமாறியுள்ளது. உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கொரோனா வைரஸ் பாதிப்பினால் தடுமாறி வருகின்றன. கடந்த சில வாரங்கள் கட்டுக்குள் இருந்த கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர் அண்மையில் அமெரிக்காவிற்கு சென்று வந்துள்ளார். பின்னர் அவருக்கு லேசான இருமல் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுக்குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கதில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனாவால் ஒரே நாளில் 5,630 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,163,038 பேராக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 404 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 36,633 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,558,229 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவில் இருந்து 38,437,852 பேர் குணமடைந்த நிலையில் 9,326,838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவுக்கு சென்று வந்த கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

பேமிலி, பிரெண்ட்ஸ் வாட்ஸ்ஆப் குரூப்களில் கூட விஷம் பரப்பும் மதவாதிகள்.. அலெர்ட் கொடுக்கும் முதல்வர்..
தமிழகம் முழுவதும் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை? எத்தனை மணிநேரம்?