மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சார தொழில்.. அதிரடி ரெய்டில் அறைகுறை ஆடைகளுடன் சிக்கிய இளம்பெண்கள்..!

By vinoth kumarFirst Published Nov 22, 2021, 1:13 PM IST
Highlights

சென்னை மாநகரில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் ஸ்பா மற்றும் மசாஜ்  சென்டர்கள் இயங்கி வருகிறது. இந்த சென்டர்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடப்பதாக சென்னை மாநகர போலீஸ் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. 

மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வந்ததாக எழுந்த புகாரை அடுத்து சென்னை முழுவதும் ஸ்பா உட்பட 151 மசாஜ் சென்டர்களில் தனித்தனியாக போலீசார் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மாநகரில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் ஸ்பா மற்றும் மசாஜ்  சென்டர்கள் இயங்கி வருகிறது. இந்த சென்டர்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடப்பதாக சென்னை மாநகர போலீஸ் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதைதொடர்ந்து மாநகரம் முழுவதும் சென்னை முழுவதும் முறையாக மற்றும் அனுமதியின்றி நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பா குறித்து அறிக்கை அளிக்கும் படி உளவுத்துறைக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி உளவுத்துறை அதிகாரிகள் மாநகர காவல் எல்லையில் அனுமதியுடன் நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள், ஸ்பாக்கள் குறித்தும் அதேபோல், அனுமதியின்றி அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் குறித்தும் புள்ளிவிபரங்களுடன் அறிக்கை அளித்தனர். அந்த அறிக்கையின்படி, ஒரே நேரத்தில் மாநகர காவல் எல்லையில் உள்ள ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை நடத்த துணை ஆணையர் தலைமையில் 12 தனிப்படையின் கீழ் 150 குழுவை அமைத்து ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். 

அந்த உத்தரவுப்படி நேற்று 12 காவல் மாவட்டங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக அண்ணாநகர், விருகம்பாக்கம், கே.கே.நகர், தி.நகர், அடையார், திருவான்மியூர், கிண்டி உட்பட மாநகரம் முழுவதும் தனிப்படையினர் முறையாக  மற்றும் முன் அனுமதியில்லாமல் நடத்தப்பட்டு வரும் 151க்கும் மேற்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் சோதனை நடத்தினர். நள்ளிரவு வரை நீடித்த இந்த சோதனையில், சட்டவிதிகளின் படி மசாஜ் சென்டர்களில் ஆண்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பெண்கள் மசாஜ் செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். அதில் பெரும்பாலான மசாஜ் சென்டர்களில் இளம் அழகிகள் மற்றும் வடமாநில பெண்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்தி அவர்கள் மூலம் வாடிக்கையாளர்களை மயக்கி ரகசியமாக பாலியல் தொழில் நடந்து வந்தது தெரியவந்தது.

 அப்படி பாலியல் தொழில் நடந்த மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் அழகிகளை மீட்டனர். சோதனையின்போது மசாஜ் சென்டர் நடத்துவதற்கான அனுமதி சான்றுகள் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பெரும்பாலான மசாஜ் சென்டர் மற்றும் ஸ்பாக்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட அனுமதி சான்றுகளை வைத்தும், ஒரே அனுமதி சான்றுகளை வைத்து பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர்கள் நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்படி சட்டவிரோதமாக நடத்தப்பட்ட மசாஜ் சென்டர்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், சட்டவிரோத மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பாக்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட இளம் பெண்களும் மீட்கப்பட்டனர். பிடிபட்ட அழகிகள் எத்தனை பேர்?, புரோக்கர்கள் எத்தனை பேர் பிடிபட்டார்கள்? என்ற விவரங்களை போலீசார் தரப்பில் இருந்து வெளியிடவில்லை.

click me!