தமிழகத்திற்கு கூடுதல் வெள்ள நிவாரண நிதி கிடைக்குமா..? - மத்திய குழு இன்று வருகை….!

By manimegalai aFirst Published Nov 21, 2021, 11:21 AM IST
Highlights

வடகிழக்கு பருவமழையொட்டி தமிழகத்தில் தொடர் கனமழையினால் பாதிக்கப்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு இன்று சென்னை வருகிறது. இரண்டு நாட்கள் பார்வையிடும் இக்குழு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது .தொடர் கனமழையினால் பல மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது சென்னை,திருவள்ளுர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை,திருபத்தூர்,கடலூர்,விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பினை சந்தித்தது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் இடுப்பளவு உயரத்திற்கு மழை நீருடன் கழிவு நீரும் சூழ்ந்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வெள்ளநீரை அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட நெல், வாழை நீரில் முழ்கி சேதமாகின. டெல்டா மாவட்டங்களில் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கனமழை காரணமாக , பாதிக்கப்பட்டுள்ளன.

பாலாறு, தென்பெண்ணை ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளம், பெருக்கெடுத்து ஓடுகிறது. இரு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு , மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கரையோர பகுதிகளில் பெரும்பாலும் வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஏராளமான தரைபாலங்கள் வெள்ளநீரில் மூழ்கி, சாலை துண்டிக்கப்பட்டு,  மக்கள் வெளியில் வரமுடியாத சூழலில் தத்தளிக்கின்றனர்.

தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக 2 ஆயிரத்து679 கோடி ரூபாயை மத்திய அரசியிடம் தமிழக அரசு கோரியுள்ளது. முதற்கட்டமாக 549 கோடி ரூபாய் விடுவிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் வெள்ள பாதிப்புகளை கணக்கிட்டு மத்திய அரசியிடம் கூடுதல் நிதி கேட்கவும் தமிழக அரசு முடுவு செய்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை  பார்வையிட , மத்திய  உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு இன்று நண்பகல் 12 மணியளவில் தமிழகம் வருகிறது. இக்குழு நாளை மற்றும் நாளை மறுநாள் தனிதனியாக இரு குழுக்களாக பிரித்து, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுகின்றனர். அதன்படி , நாளை காஞ்சிபுரம் ,திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஒரு குழுவும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மற்றொரு குழுவும் செல்கின்றனர். அதுப்போன்று நாளை மறுநாள் டெல்டா மாவட்டங்களுக்கு ஒரு குழுவும், ராணிப்பேட்டை ,திருப்பத்தூர், வேலூர் மாவடங்களுக்கு ஒரு குழுவும் செல்கின்றனர். பின்னர் வரும் 24 ஆம் தேதி முதலமைச்சருடன் மத்திய குழு வடகிழக்கு பருவமழை வெள்ள பாதிப்புகள் குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகின்றனர். பின்னர், டெல்லி சென்றது இக்குழுவால் எவ்வளவு பரப்பளவில் சேதம் ஏற்ப்பட்டுள்ளது என்பதையும் , எவ்வளவு நிவாரண தொகை வழங்கலாம் என்பதையும் அறிக்கையாக உள்துறை அமைச்சகத்திடம் வழங்கப்படும்

 

click me!