கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல்... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

By Narendran SFirst Published Jan 10, 2023, 10:12 PM IST
Highlights

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோ அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.

இதையும் படிங்க: மாநில அரசு, மத்திய அரசு என வரும்போது யார் சொல்வதைதான் கேட்க வேண்டும்... ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி பதில்!!

அப்போது, மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக்கை தடை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் தாராளமாக கிடைப்பதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து, பிளாஸ்டிக் தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்தவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் விற்கும் கடைகளை சீல் வைக்க வேண்டும் என திண்டுக்கல் ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மீன் வரத்து குறைவு.. ராக்கெட் வேகத்தில் உயரும் மீன்கள் விலை - பொதுமக்கள் அதிர்ச்சி

மேலும், கொடைக்கானலுக்கு செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைக்க வேண்டும், அனைத்து பேருந்துகளையும் சோதனை செய்ய வேண்டும், சோதனைக்கு வாகனங்களை நிறுத்தாத ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய நிரந்தர படைகளை அமைக்க வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜன. 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

click me!