நீட் தொடர்பாக தமிழக அரசிடம் சரமாரி கேள்விகள் எழுப்பிய உயர்நீதிமன்றம்...! என்ன தெரியுமா?

Asianet News Tamil  
Published : Sep 19, 2017, 08:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
நீட் தொடர்பாக தமிழக அரசிடம் சரமாரி கேள்விகள் எழுப்பிய உயர்நீதிமன்றம்...! என்ன தெரியுமா?

சுருக்கம்

high court questions for tamilnadu government

நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. 

நீட் தேர்வு தொடர்பாக உடுமலையை சேர்ந்த கிருத்திகா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 

அதாவது, நீட்டுக்கு எதிராக அரசியல் கட்சிகள்  நடத்திய போராட்டங்கள் எத்தனை? மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் எத்தனை? மாணவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளதா? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? தனியார் அமைப்புகள் ஏதும் நீட்டுக்கு எதிராக போராட தூண்டியுள்ளதா? வழக்குகளால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கூடாதா? நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை? என சரமாரியாக பல்வேறு கேள்விகளை நீதிபதி கிருபாகரன் எழுப்பினார். 

மேலும் இத்தகைய கேள்விகளுக்கு நாளைக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 
 

PREV
click me!

Recommended Stories

ஹேப்பி நியூஸ்! ஊதியம் உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியானது.. யாருக்கெல்லாம் தெரியுமா?
இறுக்கும் சிபிஐ... விஜய் எடுக்கும் இறுதி முடிவு..! தத்தளிக்கும் தவெக