விரைவில் சென்னையை நோக்கி...! எச்சரிக்கை மணி அடித்த ஆய்வறிக்கை...!

 
Published : Sep 19, 2017, 06:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
விரைவில் சென்னையை நோக்கி...! எச்சரிக்கை மணி அடித்த ஆய்வறிக்கை...!

சுருக்கம்

chennai will suffer soon if weather continous like this

விரைவில் சென்னையை நோக்கி...! 

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள காலநிலை மாறுபாடு காரணமாக தட்பவெட்ப நிலைக்கு முற்றிலும்  மாறுபட்டுள்ளது. இதன் காரணமாக உலக அளவில் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக பனிக்கட்டி அதிக அளவில் உருக தொடங்கியுள்ளது.

இப்படியே வெப்ப நிலை அதிகரித்தால் கண்டிப்பாக கடல் நீர்மட்டம் அதிகரித்து அதனால் பல  இயற்கை சீற்றங்கள்  வரும்  என்பதில் எந்த  மாற்றமும் இருக்காது

உதாரணத்திற்கு, அமெரிக்காவை அண்மையில் மிரட்டிய இர்மா புயல்,உலக  அளவில் அதிக தாக்கத்தை  ஏற்படுத்தியது  என்பது  குறிப்பிடத்தக்கது. மேலும்  இதே போன்ற  நிலை  தொடருமானால்,  இன்னும் 30 ஆண்டுகளில் சென்னையை ஒட்டிய கடற்பகுதியின் நீர் மட்டம் இரண்டரை மீட்டர் அதிகரித்து 6.85 மீட்டரை தொடும் என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது

மெட்ராஸ் ஐ.ஐ.டி.மற்றும் இரு அமைப்புகளும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால்  ஏற்படும் விளைவுகள் என்ன ?

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் அதிகம் பாதிக்கப்படும்  நிலை  உருவாகும் என்றும்,எனவே இதற்கேற்ப மாநில அரசு உஷாராக இருக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வு மூலம் தெரிவிக்கபட்டுள்ளது

இது போன்ற  விளைவுகளை  எதிர்கொள்வதற்கு, அதற்கு  முன்கூட்டியே ஒருங்கிணைந்த கடலோர பகுதி மேலாண்மை திட்டத்தை தமிழகத்திலும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.

ஒரு வேளை இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், கடல் நீர் மட்டம் உயர்ந்து, அமெரிக்காவை மிரட்டிய இர்மா போன்றதொரு புயல் சென்னையையும் தாக்க வாய்ப்பு உள்ளது என மெட்ராஸ்  ஐஐடி தெரிவித்துள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளுக்கு கொத்தாக 9 நாட்கள் விடுமுறை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாட்டம்!
மகாத்மா காந்தி மீது வன்மம்.. 100 நாள் வேலை திட்டம் மாற்றத்துக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!