நீட் தேர்வு குளறுபடி வழக்கு... தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

By Narendran SFirst Published Oct 3, 2022, 11:16 PM IST
Highlights

நீட் தேர்வு குளறுபடி வழக்கில் மாணவிக்கு அசல் விடைத்தாளை காட்ட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நீட் தேர்வு குளறுபடி வழக்கில் மாணவிக்கு அசல் விடைத்தாளை காட்ட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இதனையடுத்து, Answer Key என்னும் உத்தேச விடைத்தொகுப்பும், தேர்வரின் ஓ.எம்.ஆர் விடைத்தாளையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இந்த ஓ.எம்.ஆர் செயல்முறையில் ஏதேனும் குறைகள் இருந்தால், தேர்வர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: வணிகவரித்துறையும் பதிவுத்துறையும் சேர்ந்து சாதனை... கடந்த ஆண்டைவிட ரூ.20,776 கோடி அதிகமாக வசூலித்து அசத்தல்!!

இந்த நிலையில் நீட் தேர்வு விடைத்தாளில் குறிப்பிட்டிருந்த மதிப்பெண்களை விட குறைவாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது தொடர்பாக மாணவி ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதுக்குறித்த அவரது மனுவில், நீட் தேர்வுக்கான விடைத்தாள்கள் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி வெளியானது. அதில் 720 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். செப் 7 இல் வெளியான நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலில் 65 மதிப்பெண் பெற்றுள்ளதாக குறிப்பிடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பூண்டி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி, இருவர் மாயம்

மேலும் விடைகள் முறையாக மதிப்பிடப்பட்டதா என சரிபார்க்க அசல் விடைத்தாளை காண்பிக்க தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விடைகள் முறையாக மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வழக்கு தொடர்ந்த மாணவிக்கு, அசல் விடைத்தாளை காண்பிக்கும்படி தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

click me!