தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி மாதா கோவிலுக்கு சுற்றுலா வந்த பயணிகள் சிலர் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர், மேலும் மாயமான 2 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப் பட்டியைச் சேர்ந்த 40 பேர் தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி மாதா ஆலயத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்களில் சிலர் பூண்டி தென்கரை பாலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியுள்ளனர். அவர்களில் சார்லஸ், பிரவின் ராஜ், பிரித்வி ராஜ், தாவித், ஈஷாக், தர்மஸ் ஆகிய 6 பேரும் ஆற்றின் ஆழமானப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
குழந்தை பிறந்து 10 நாட்களில் பணிக்கு திரும்பிய தாம்பரம் மேயர் - பொதுமக்கள் நெகிழ்ச்சி
undefined
நீச்சல் தெரியாதக் காரணத்தால் இவர்கள் ஆறு பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். இது தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சார்லஸ், பிரிதிவ் ராஜ் ஆகிய இருவரையும் சடலமாக மீட்டனர். தொடர்ந்து 6 மணி நேரம் தேடுதலுக்குப் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக தாவித், பிரவின்ராஜின் உடல்களை மீட்டனர்.
போதையில் தகராறு செய்த கணவனை விஷம் வைத்து கொன்ற பெண்
மேலும் மாயமான இருவரை ரப்பர் படகின் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் காணாமல் போனவர்களை மீட்கும் பணியையும் விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
சுற்றுலாச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அவர்களது சொந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.