நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசியல் களத்தில் முக்கியமான அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்கிறார். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழ் தேசியத்தை கையில் எடுத்து அரசியலில் ஈடுபடும் இவர் மத்திய, மாநில அரசின் தவறுகளை தொடர்ந்து வெளிப்படையாக சுட்டிக்காட்டி வருகிறார்.
பல்வேறு விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சீமான் மீது சென்னை திருமங்கலம் காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சீமான் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. நீதித்துறையை சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்துடன் ஒப்பிட்டு ஒரு கருத்தை சீமான் கூறியிருந்தார்.
மேலும் நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் ஆபாச வார்த்தைகளால் அவர் பேசினார் என்று கூறி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் போலீசில் புகார் கொடுத்திருந்தார். ஆனால் இந்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் அலெக்சாண்டர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் எழும்பூர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததால் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் போலீசார் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே நேர்மையான விசாரணை மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில், சீமான் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டு இருந்தார். அதனடிப்படையிலேயே சீமான் மீது இப்போது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசியல் களத்தில் முக்கியமான அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்கிறார். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழ் தேசியத்தை கையில் எடுத்து அரசியலில் ஈடுபடும் இவர் மத்திய, மாநில அரசின் தவறுகளை தொடர்ந்து வெளிப்படையாக சுட்டிக்காட்டி வருகிறார்.
சீமான் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு
பல்வேறு விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சீமான் மீது சென்னை திருமங்கலம் காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சீமான் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. நீதித்துறையை சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்துடன் ஒப்பிட்டு ஒரு கருத்தை சீமான் கூறியிருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
மேலும் நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் ஆபாச வார்த்தைகளால் அவர் பேசினார் என்று கூறி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் போலீசில் புகார் கொடுத்திருந்தார். ஆனால் இந்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் அலெக்சாண்டர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் எழும்பூர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததால் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் போலீசார் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே நேர்மையான விசாரணை மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில், சீமான் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டு இருந்தார். அதனடிப்படையிலேயே சீமான் மீது இப்போது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.