தோகாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த வந்த இளைஞரிடம் சோதனை மேற்கொண்ட போது 11 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கடத்திவரப்பட்டது தெரியவந்ததையடுத்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்
தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகளவும் இருப்பதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக போலீசாரும் தொடர் சோதனை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கஞ்சா வேட்டையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தாலும் தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விநியோகம் நடைபெறுவதாகவும் இதனால் குற்ற சம்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
11 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
இதனையடுத்து தோகாவில் இருந்து சென்னை வந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த நிலையில், அவரது பேக்கை சோதனை செய்யப்பட்டது.அப்போது 11 கிலோ எடை கொண்ட ஹெராயின் போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 11 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த இளைஞரை கைது செய்ய சுங்கத்துறையினர் போதைப்பொருட் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து போதைப்பொருள் யாருக்காக கடத்தி வரப்பட்டது.? எங்கிருந்து கொண்டுவரப்பட்டது. இதற்கு யார் தலைமை என்பது தொடர்பாக விசாரணையானது நடைபெற்று வருகிறது.