நாகப்பட்டினம் மாவட்டம் பி.ஆர்.பட்டினத்தை சேர்ந்த சந்திரன் மகன் கார்த்திகேயன் (20) அதே பகுதியை சேர்ந்த மலைராஜ்(35). அக்கரைப்பேட்டையை சேர்ந்த ராஜசேகர் (25). சம்பாதோட்டத்தை சேர்ந்த சஞ்சீவ் காந்தி (25) ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் மீன்பிடி படகு வாங்க காரில் சென்றனர்.
கார் மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 மீனவர்கள் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் பி.ஆர்.பட்டினத்தை சேர்ந்த சந்திரன் மகன் கார்த்திகேயன் (20) அதே பகுதியை சேர்ந்த மலைராஜ்(35). அக்கரைப்பேட்டையை சேர்ந்த ராஜசேகர் (25). சம்பாதோட்டத்தை சேர்ந்த சஞ்சீவ் காந்தி (25) ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் மீன்பிடி படகு வாங்க காரில் சென்றனர். காரை கார்த்திக் ஓட்டினார்.
undefined
இதையும் படிங்க: வெயிலில் இருந்து தப்பிக்க கோடை மழை வரப்போகுதாம்.. குட்நியூஸ் சொன்ன கையோடு வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் கிழக்கு கடற்கரை சாலையில் கார் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது தென்காசியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செங்கல் ஏற்றிச் சென்ற லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், கார் அப்பளம் நொறுங்கி பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டது.
இதையும் படிங்க: சென்னையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட காதல் கணவர்! 4 மாதத்தில் மனைவி தற்கொலை! என்ன காரணம்? பகீர் தகவல்!
காரை ஓட்டிய கார்த்திகேயன், மலைராஜ் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜசேகர், சஞ்சீவ் காந்தி ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், ராஜசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சஞ்சீவ் காந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.